தங்கள் மற்றும் வாழ்விடங்களை கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று. நடப்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும் இன்னும் கண்டறியப்படாத பல இடங்கள் பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு நிலங்களிலும் உயர்ந்த மலைகளிலும் கூட மனிதர்கள் தங்கள் கால் தடத்தை பதித்து விட்டனர். ஆனால் ஒரே ஒரு பயணம் இதுவரை எவராலும் முடிக்க முடியாததாக இருக்கிறதாம்.

அதுதான் பூமியிலேயே நீண்ட நெடிய தொலை பயணமாக இருக்கும். அது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் தொடங்கி கிழக்கு ரஷ்யாவின் மகத்தான் டவுனில் முடிவடைகிறது. உலகிலேயே நீண்ட பயண பாதையான இதனை ஒருவர் கூட இதுவரை நடந்து முடிந்தது இல்லையாம். நடக்கக் கூடியது என சொல்லப்பட்டாலும் இதன் மொத்த தொலைவு 22,387 கிலோமீட்டர் ஆகும்.

இந்த வழியில் பயணம் செய்யும் பயணிகள் விமானங்கள், படகுகள் மற்றும் கார்கள் என எதையும் நாட வேண்டியதே இல்லையாம். ரஷ்யா டு தென் ஆப்பிரிக்கா வரையிலான இந்த பாதையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் வழியாக பயணிகள் 17 நாடுகள் மற்றும் ஆறு பாலங்களை கடந்து செல்ல நேரிடும். எந்த இடைவேளையும் இல்லாமல் ஒரு நபர் தொடர்ந்து நடந்தால் 182 நாட்களில் இந்த பயணத்தை முடித்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த நீண்ட பாதையின் தொலைவானது 13 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்குவதற்கு சமம் என்கின்றனர். இந்த பயணத்தை முடிக்க பலர் எண்ணினாலும் நிபுணர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது பயணிகளை தெற்கு சூடான் போன்ற மோசமான மற்றும் ஆபத்தான பாதைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் சமீபத்தில் பல்லாயிரத்துக்கும் அதிகமான உயிரை பறித்த துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது இந்த பாதையை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாதையானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்பு பேசும் பொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.