சீனாவில் வசித்து வருபவர் ஜாங். இவர் “xian mulin culture communication company ” என்ற நிறுவனம் நடத்திய செல்ஃப் டிசிப்ளின் சேலஞ்ச் போட்டியில் பங்கு பெற்றார். இந்தப் போட்டியில் பல்வேறு விதமான கண்டிஷங்களுடன், வித்தியாசமான டாஸ்க்கள் கொடுக்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கும், தினமும் ஒருமுறை மட்டுமே விளக்கை பயன்படுத்த வேண்டும். கேமராக்களுக்கு  முகம் தெரியாமல் இருக்கக் கூடாது போன்ற பலவிதமான கட்டுப்பாடுகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்படும். இவற்றை மீறினால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.

இதேபோன்று ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்தால் ஒவ்வொரு தொகைகள் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டியில் முதல் 3 நாட்கள் முழுவதுமாக தங்கினால் 79,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். 6 நாட்கள் முழுவதாக தங்கினாள் 3,26,000 ரூபாய் வழங்கப்படும். போட்டியின் முடிவு வரை அறையில் தங்கி இருப்பவர்களுக்கு ரூபாய் 1.1 கோடி ரூபாய் வரை பரிசு தொகை வழங்கப்படும் .  எனவே ஜாங் இந்த போட்டியின் பரிசுத்தொகையை பெறுவதற்கு ஆசைப்பட்டு செப்டம்பர் மாதம் முதலில் நுழைவு கட்டணம் செலுத்தி போட்டியில் பங்கேற்றார். ஆனால் முதல் கட்டத்தில் 24 மணி நேரத்திற்குள் முகத்தை மூடியதாக வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் நுழைவு கட்டணம் செலுத்தி போட்டியில் ஜாங்  இரண்டாவது முறையாக பங்கேற்றார்.

இதே போன்று மூன்று முறை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து போட்டியிலிருந்து வெளியேறுவதை கவனித்து அவரது குடும்பத்தினர் அவர் ஏமாற்றப்படுவதாக கூறியுள்ளனர். இதனை உணர்ந்த ஜாங் அந்தப் போட்டி நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு இதுவரை ஜாங் ரூபாய் 2.3 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். ஆனால் இந்த போட்டியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நீதி மன்றம் இதுவரை விசாரணை தேதியை அறிவிக்கவில்லை. போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டு கடனில் சிக்கிய ஜாங் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.