
தாய்ப்பால் என்பது குழந்தையின் முழுமையான ஊட்டச்சத்து ஆகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் பிறந்த ஈவ்லின் என்ற குழந்தை மருத்துவமனையில் பிறந்தவுடன் தாய் மற்றும் குழந்தை வீட்டிற்கு சென்றனர். அதன் பின் தாய், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
அவர் தனது குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது தாய் மிகவும் சோர்வாக இருந்ததால் அசர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின் கண்விழித்து பார்த்தபோது, குழந்தை அசையாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது குழந்தையின் இதயம் நின்று, மூச்சுவிடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். தாய் தூங்கும் போது குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடித்துள்ளது. இதனால் அதிகமான தாய்ப்பாலை உட்கொண்டதால், சுவாச பாதைகள் பாலால் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக குழந்தையின் இதயம் நின்று, அவரது சுவாசம் நின்றுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.