ஹைதராபாத்தில் உள்ள ஒரு நெரிசலான கூட்டத்தில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காவல்துறையின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் வலை பக்கத்தில் பதிவாகியுள்ளது.

வீடியோவுடன் ஹைதராபாத் காவல்துறை தெருக்கல், பொது இடங்கள் மற்றும் நீங்கள் எங்கு தவறாக நடந்து கொண்டாலும், உங்கள் செயல்களை SHE குழு பதிவு செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார். SHE குழு என்பது காவல்துறையின் ஒரு சிறப்பு பிரிவாகும். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களது வேலையாகும்.