
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா, விஜய் நடிக்கும் லியோ படத்தின் பாடல் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல்…. அண்டா நிறைய சரக்கு கொண்டு வா உள்ளிட்டு மதுவை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றதை நீக்க வேண்டும் என பேட்டியளித்து இருந்தார்.
இந்த பேட்டி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் ராஜேஸ்வரி பிரியாவை ஆபாசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடிகர் விஜய் கைது செய்ய வேண்டும் எனவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த ராஜேஸ்வரி பிரியா, தொடர்ச்சியாக மக்களுக்காக போராடிட்டு இருக்குற என்னையே இவ்ளோ ஆபாச வார்த்தைகளை சொல்லி, அச்சுறுத்த நினைக்கிறார் விஜய் அப்படின்னா…. காரணம் யாரு ? அவருதான்.
ஏன்னா…. ட்விட்டர் அக்கவுண்ட் …. விஜய் ட்விட்டர் பக்கத்தை தொடர்ச்சியாக எல்லா பதிவிலும் டேக் செஞ்சிருக்காங்க. அதுல டேக்ஸ் செஞ்சி தான் எல்லா பதிவுகளும் இடம் பெற்று இருக்கு. அப்போ வாங்கிய பணத்துக்கு நாங்க வேலை பார்க்கிறோம் அப்படிங்குறத ஐடி, பேக் ஐடி எல்லாம் நிரூபிக்குது என் தெரிவித்தார்.