மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளால் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதுபோன்று தமிழ் சினிமாவிலும் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா. இவர் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட பாடல்களையும் தமிழில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் படங்களின் சிறிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.

சுஜித்ரா கடந்த ஆண்டு நடிகர் நடிகைகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் நான் பாடிய மே மாசம் 98ல் மேஜர் ஆனேன் என்ற பாடலை வைரமுத்து கேட்டு எனக்கு போன் செய்து பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்றும் உன் பாடலின் காமம் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அப்போது அவர் உங்களுக்கு பரிசு தருகிறேன் என்று கூறி என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது நான் பாட்டியுடன் அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் என்னிடம் நீ தனியாக வருவாய் என்று நினைத்தேன் என கூறினார். அதற்கு நான் எங்கு போனாலும் பாட்டியுடன் தான் செல்வேன் என்று கூறினேன்.

இதன் மூலம் அவர் பாலியல் வன்முறைக்காக தன்னை அழைத்தது தெரிய வந்தது. அதன் பின் என் பாட்டி நீங்கள் சுஜிதாவிற்கு தந்தை போல என்று கூறினார். இதை கேட்ட வைரமுத்துக்கு வியர்த்து விட்டது. அவர் தனக்கு பரிசாக ஷாம்பு பாட்டில்களை கொடுத்து அனுப்பினார் என தெரிவித்தார். அவர் என்னை விடாமல் போன் செய்து என்னை தொந்தரவு செய்து கொண்ட இருப்பார் என கூறினார். இதை போன்று பின்னணி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தது  குறிப்பிடத்தக்கது.