பராசக்தி டைட்டில் ஐ பிற படங்களுக்கு தலைப்பாக வைப்பதை தவிர்க்குமாறு நேஷனல் பிக்சர்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதி சிவாஜி நடிப்பில் கடந்த 1952 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரித்திருந்தார் இதனை குறிப்பிட்ட நிறுவனம் படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி படத்திற்கும் பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த வருடமே தான் அதை புக் செய்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பில் உபயோகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து உடனே அறிக்கை வெளியிட்ட நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு மாற்றப்படுமா அல்லது நிறுவனத்துடன் பேசி சமூகத் தீர்வு எட்டப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.