கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி அந்த குழந்தைக்கு, சித்ரா சாப்பாடு ஊட்டி விட்டார். அதன் பின் வழக்கம்போல் அந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. சித்ரா வீட்டின் வேலையை பார்க்க சென்றார். அப்போது குழந்தைக்கு கிஷாந்த் வீட்டிற்கு அருகில் உள்ள பாசன வாய்க்காலில் விழுந்தார்.

அதில் அவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு தணக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தையை இழந்த சித்ரா மன உடைந்து சோகமாக காணப்பட்டார். அதன் பின் கடந்த 20ம் தேதி அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.