
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குண்டுக்கட்டா TET ஆசிரியர்களை தூக்கிட்டு போறாங்க.. கேட்ட இல்ல இல்ல அவங்களே போய்ட்டாங்க அப்படின்னு சொல்லுறாங்க. உங்க காட்சி ஊடகத்தை பாத்தோம்னா… குண்டுக்கட்டா காவல்துறை தூக்கிட்டு போறாங்க. தேர்தல் அறிக்கையில் கொடுத்துருக்கு… ஒண்ணுக்குமே பதில் கிடையாது.
எதற்குமே ஆக்க பூர்வமான கேள்விகள் கிடையாது, பதில்கள் கிடையாதுன்னா…. எப்படி ஆளும் கட்சி அரசியல் பண்ண முடியும். ஆளும்கட்சி ஆக்கபூர்வமா இருக்கணும். தமிழகத்துல ஆளும்கட்சி எதிர்க்கட்சி மாதிரி இருந்தா எப்படி இங்க ஆட்சி நடக்கும், ஆட்சி இயந்திரம் இருக்கும்?
கூட்டணி தொடர்பாக அதிமுக விமர்சனம் வைக்கிறாங்க என்பதற்காக பதில் சொல்லுவது சரியாக இருக்காது. நமக்கு தெரியும்… மக்களுக்கு தெரியும்… ஒரு தலைவர் ஒரு இடத்துல கருத்து வைக்கிறாங்கன்னா…. அந்த தலைவருடைய கருத்து சொந்த கருத்தா இருக்கலாம். அவர் அத பேசணும் நினைச்சி பேசி இருக்கலாம். அது அவர் கருத்து.
அதற்கு நான் பதில் கருத்து வைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. இதற்கு 2024 தேர்தல் களம். தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையருக்கு எதிரான கட்சியா சத்தியமா கிடையாது. ஒரு சிறுபான்மையர் எதிர்த்து அண்ணாமலை பேசிருக்கானா கண்டிப்பா கிடையாது என தெரிவித்தார்.