
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அன்போடு அழைக்கப்படும் தமன்னா தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் ஆணாதிக்கம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திரையுலகில் அன்றில் இருந்து இன்று வரை பெண்களை விட ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. நான் பல படங்களில் நடித்து விட்டேன். இருப்பினும் இன்றும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு ஆண் தன்னுடைய கருத்தை சொல்லும்போது அதை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். இதேபோன்று ஒரு பெண் தன்னுடைய கருத்தை சொன்னால் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது என்னவாக வேண்டும் என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று கூறுவேன். நான் கூறியதை கேட்டு பலரும் என்னை ஒரு மாதிரி பார்த்ததோடு உங்கள் வீட்டின் நிதி நிலைமை என்ன.? இப்படி சொன்னால் பெற்றோர் என்ன நினைப்பார்கள். இப்போது நடிகையாக வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தியதால் தற்போது நான் ஒரு நடிகையாக மாறிவிட்டேன். என்னுடைய நண்பர்களின் பார்ட்டியில் கூட நான் சோலோவாக நடனமாட வேண்டும் என்று விரும்புவேன். நான் அங்கிருந்தவர்களையும் அழைத்து வந்து நடனமாடுமாறு கூறுவேன். இது என்னுடைய குணம். நான் எதிலும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். நான் சிறுமியாக இருந்தபோது மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி மற்றும் கரிஷ்மா கபூர் போன்றோர்களை பார்த்து எனக்கு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று கூறினார். மேலும் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா திரையுலகில் ஆணதிக்க பிரச்சனை இருக்கிறது என்று கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.