மனித வாழ்க்கையில் டெலிவரி சேவைகள் தற்போது முக்கிய பங்கு வைக்கின்றன. சிறு பொருள்கள் முதல் உணவு வரை அனைத்தையும் சில நிமிடங்களில் வீட்டுக்கு கொண்டு வரும் இ-சேவைகள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியமானதாக மாறிவிட்டது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு டெலிவரி முகவர் போர்டல் சேவையில் வந்த வித்தியாசமான ஆர்டரை பற்றி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவில், “இன்று போர்டல்லில் மிகவும் வித்தியாசமான ஆர்டர் ஒன்று வந்துள்ளது. அதாவது டவர் 17 இல் இருந்து டவர் 19க்கு வெறும் இரண்டு நிமிட தூரத்தில் ஒரு பார்சலை டெலிவரி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அந்தப் பார்சலில் இரண்டு கேமிங் கண்ட்ரோலர்கள் மற்றும் ஒரு வீடியோ கேம் இருந்தது. இதனை வீடியோவில் காட்டிய டெலிவரி முகவர் நகைச்சுவையுடன் “இங்கு உள்ளவர்கள் மிகவும் சோம்பேறிகள் போல” என சிரித்தவாறு கூறுகிறார். மேலும் இந்த வீடியோவிற்கு கீழ் “போர்டலில் வந்த சோம்பேறி டெலிவரி ஆர்டர்” என்ற வாசகத்தோடு பதிவிட்டபட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பொதுமக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.