காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மோடி பணவீக்கத்தையும், வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கி விட்டது. நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.

ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையை பற்றி பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த நாட்டில் அரசியலமைப்பு உயர்ந்தது. அதன் கீழ் நமது ஜனநாயகம்  இயங்குகிறது. காங்கிரஸ் வளர முயற்சி செய்யும்போது எல்லாம், அதை அடக்க முயற்சி செய்கிறார்கள்.

நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. நாடு தான் உயர்ந்தது, பின்னர் தான் கட்சி எல்லாம். அனைவரும் நாட்டிற்காக ஒன்று பட வேண்டும். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்ட போதும், பிகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று தெரிவித்தார்.