தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் தற்போது பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை எனவும் என்னிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ரவி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தி மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அதாவது தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றி விட்டதாக ஜெயம் ரவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தி இது உங்கள் வீடு. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த வீட்டுக்கு வரலாம் என்று ஜெயம் ரவியிடம் கூறியதாக ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜெயம் ரவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அவரிடமிருந்து வீட்டை மீட்டுக் கொடுக்கும் படியும் கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஜெயம் ரவிக்கு அட்வைஸ் சொன்ன போலீஸ் சட்டரீதியாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.