சதீஷ்கரின் பலோடபஜார் பதாபரா மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள், ஜமுனா (28), யசோதா (30) மற்றும் ஜமுனாவின் மகன் யாஷ்(11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ராம்நாத் பட்லா மற்றும் அவரது 2 மகன்களையும் கைது செய்தனர்.

அதாவது பட்லாவின் மகள் சமீபத்தில் நோயால் அவதிப்பாட்டார். இதற்கு சைத்ரம் கைவர்த்தியாவின் தாயார் செய்த சூனியம் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார். அதனால் பட்லாவும் அவரது 2 மகன்களும் இந்த கொலை சம்பவத்தை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தின் போது சைத்ராவின் தாயார் வீட்டில் இல்லை என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.