
பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின் அறிகுறியா? என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி அந்த ஹோன்சு தீவின் தெருக்களிலும், வீடுகளிலும் ஆயிரக்கணக்கான காகங்கள் கரைந்துக் கொண்டே சுற்றி வந்திருக்கிறது. இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.