
ஒரு பேக்கரி கடையில் நடைபெற இருந்த கொள்ளை முயற்சி திடீரென திருப்பம் பெற்றது. அதாவது நீலம் மற்றும் சிவப்பு ஹூடிகள் அணிந்த இருவர், வாடிக்கையாளர்கள் போலவே கடையில் நுழைந்தனர்.
ஆனால், திடீரென நீல ஹூடியில் இருந்த ஒருவர் கவுன்டரை தாண்டி கேஷ் கவுன்டருக்குள் பாய்ந்தார் மற்றும் துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை மிரட்டினார். உயிர்க்கு ஆபத்து என்பதை உணர்ந்த கடை உரிமையாளர், எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக ஒதுங்கினார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
— Moments before disaster (@VideosProh) April 4, 2025
அந்த நேரத்தில், திடீரென ஒரு போலீஸ்காரர் கடையில் நுழைந்தார். நிலைமையை உடனடியாக புரிந்து கொண்ட அவர், கவுன்டரில் இருந்த கொள்ளையர்களின் துப்பாக்கியை பறித்து, அதே துப்பாக்கியால் அவர்களை மிரட்டி சரணடைய செய்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “இந்த போலீஸ்காரர் ஒரு வீரன்… 15 விநாடிகளில் குற்றத்தை தீர்த்து வைத்தார்” என ஒருவர் கூற, பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.