பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென ஆயுதத்துடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பணம் திருட நுழைந்துள்ளனர். உடனே அங்கு பணியாற்றிய ஒருவர் தைரியமாக கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் அவருடன் மற்ற ஊழியர்களும் இணைந்து அறைக்குள் கொள்ளையர்களை நுழைய விடாமல் தடுத்து வெளியே தள்ளி கதவை தாழிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் மீண்டும் அறையின் கதவை தீவிரமாக திறக்க முயற்சித்தனர்.

அப்போது ஊழியர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த மோதலில் திடீரென ஒரு கொள்ளையர் கையில் உள்ள துப்பாக்கியால் அறையனுள்ளே சுட்டதும் துணிச்சலாக செயலாற்றிய ஊழியர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்ற இரு ஊழியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பரபரப்பான சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெட்ரோல் பங்க் போன்ற பொது இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.