திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சிறுமிக்கும் காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஏர்கன் கொண்டு வந்திருந்த இளைஞர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். மேலும் இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.