ஒடிசா மாநிலம் புவனேஸ்வரினில் உள்ள ஜன்பத் என்ற பரபரப்பான சாலையில்கடந்த 15ம் தேதி அன்று இளைஞர்கள் 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை ஓட்டினர். அதோடு ஆபத்தான ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தனர். இதில் சில பேர் காரின் கண்ணாடி இருக்கும் இடத்தில் தொங்கிக்கொண்டு சென்றனர்.

இதனால் அவர்களுக்கும் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.