
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இவர் படத்தின் தெலுங்கு ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் லட்டு வேண்டுமா? என கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி அது ரொம்ப சென்சிடிவ் எனக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளார். மீண்டும் லட்டு வேணுமா? என்று தொகுப்பாளர் கேட்ட நிலையில் எனக்கு லட்டே வேண்டாம் என கார்த்திக் கூறிவிட்டார்.
இந்நிலையில் ஆந்திரா துணை முதல் மந்திரி பவன் கல்யாண் லட்டை கேள்விக்குறிய பொருளாக்குவதா? என கண்டனம் தெரிவித்துள்ளதையடுத்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் “நான் தெரியாமல் பேசியதை உங்கள் மீது வைத்துள்ள மரியாதையால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் திருப்பதி ஏழுமலையானின் பக்தனாக நம் கலாச்சாரத்தை எப்போது மதிப்பவன் நான்” என்றும் கூறியுள்ளார்.