தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சான்றிதழ் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு தகுதியானது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.