
சவுதி அரேபியாவில் 19 குழந்தைகளுக்கு தாயான ஹம்தா அல் ருவைலி (43) பெண் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நிர்வகித்துக் கொண்டே phd படிப்பை படித்து முடித்துள்ளார். இவருக்கு 10 மகன்களும், 9 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு குழந்தை வளர்ப்பது மிகவும் கடினமானது இருப்பினும், எனது அனைத்து குழந்தைகளின் தேவைகளுக்கும் நான் பதில் அளிக்கிறேன்.
அவர்களின் இலக்கை அடைய உதவுகிறேன். அவர்களின் பொழுதுபோக்கை தொடரவும் ஊக்குவிக்கிறேன். குழந்தைகளும் படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். என்று ஹம்தா கூறினார். அவருக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்த போதிலும் அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் திருமணமான பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.