
பழனியில் உள்ள புது ஆயக்குடி பகுதியில் பாஜக உறுப்பினரை சேர்க்கும் வேலை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க அரசு மக்களுக்காக செய்த திட்டங்கள் குறித்து கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க-வில் இணைந்தவா்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, விக்ரவாண்டி தவெக மாநாட்டில் தான், தனது கட்சி கொள்கைகளை விஜய் வெளியிட்டுள்ளார்.
அதற்கு முன்பாகவே அவரை பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கூட வாழ்த்து கூற விஜய்க்கு தெரியவில்லை என்று கூறினார்.
திமுகவின் B டீம் போல தவெக உருவெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவா் பொதுமக்கள் நலனுக்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.