
புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுரேஷ், ஆதித்யாவின் ரெயின் கோட்டை கேட்டுள்ளார். ஆனால் ஆதித்யா கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு 2 பேரும் களைந்து சென்றனர். அன்று இரவு நார்ஹே பகுதியில் இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் வைத்திருந்த கத்தியால் ஆதித்யாவை தாக்கினார். இதில் அவரது வயிறு, மார்பு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.