விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த நூல் அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்டு உழைத்த தோழர்கள் குறிப்பாக… இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இவர்கள் யாரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.

இவர்கள் கட்சியில் அதிகாரம்  வாய்ந்த பொறுப்பிலே இருந்து செயலாற்ற கூடியவர்களும் இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கக்கூடிய தோழர்கள்…. இந்த நூலை படித்து பார்த்துவிட்டு… இந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை… உள்வாங்கிக்கொண்ட நிலையில்… இதை ஏன் ஒரு ஒளி வடிவம் ஆக்கி, இன்னும் பரவலாய் கொண்டு போய் ஏன் சேர்க்கக்கூடாது என்கிற உந்துதல் அவர்களுக்குள்ளே ஏற்பட்டிருக்கிறது. என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

எந்த அளவிற்கு அவர்களுக்குள்ளே இந்த நூல் தாக்கத்தை ஏற்படுத்திருக்க கூடும். எந்த அளவிற்கு அவர்களுக்கு ஒரு உந்துதலை இது உருவாக்கி இருக்கக்கூடும். அந்த அளவிற்கு அவர்கள் இதிலே முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, கடுமையாக பணியாற்றி இருக்கிறார்களே… இவ்வளவு பேரை ஒருங்கிணைத்து இருக்கின்றார்களே… இதை மெனக்கட்டு வந்து  படிப்பதற்கு கவின்  மலர், விக்ரம் ரவிசங்கர், ரித்திகா யாஷினி ஆகியவர்களிடம் எல்லாம் பேசி…. அவர்களை அழைத்து வந்து…. அதை படிக்க வைத்து…

இவையெல்லாம் சாதாரணமான ஒரு பணி அல்ல.  இதுக்கு போய் படிச்சிட்டு உட்கார்ந்திருக்க முடியுமா ? இது எல்லாம் ப்ரொபஷனலா இருக்குறவங்க தான் செய்வாங்க. ஒரு மணி நேரம் இதை படிக்க வேண்டும் என்றால்,  அதற்கு ஒரு தொகை வேண்டும். ப்ரொபஷனலா வருவாங்க. இசையமைக்க வேண்டும் என்றால்,  அதற்கு ஒரு தொகை வேண்டும். இப்படி AV ஆடியோ, வீடியோ விஷுவல் செய்ய வேண்டும் என்றால்,  அதற்கு ஒரு சம்பளம் வேண்டும் என்கிற நிலை தான் வணிக தலங்களில் பார்க்கிறோம். அப்படி எல்லாம் இல்லாமல் எல்லோரும் முழுமையாக தங்கள் உழைப்பை செலுத்தி இருக்கிறார்கள் என்றால்,  எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.