
நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்தி இயக்கத்தில் பேசிய மறைந்த நீட் மாணவி அனிதாவின் அண்ணன் பேசும் போது, நான் இங்கு இந்த மேடையில் எல்லாரும் முன்னாடியும் பேசுவதற்கு மிக முக்கியமான காரணம் தங்கை அனிதாவின் உடைய நீட் எதிர்ப்பு போராட்டம் தான். அது மட்டுமே கிடையாது கலைஞர் இருந்த போதிலிருந்தே நீட்டை எதிர்த்து திமுக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு காரணமாகத்தான் இந்த மேடையில் இருந்து பேசுவதற்கு வந்திருக்கிறேன்.
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாணவரணி – இளைஞர் அணி மற்றும் மருத்துவர் அனி அமைப்பாளர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
போன வாரம் பிரின்ஸ் கஜேந்திரபாபு தோழரை சந்தித்து, எலக்சன் வரப்போகிறது. இதான் நமக்கு கடைசியாக இருக்கிற ஒரே வாய்ப்பு. 2024 எலக்சன் மட்டும்தான். நீட்டிக்கு எதிராக நாம் ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நான் ஒரு தனி நபராக ஒரு பரப்புரை பயணம் போகணும் என்று நினைக்கிறேன் என பேசிக் கொண்டிருந்தேன்.
அனால் இந்த வாரம் பார்த்தீர்கள் என்றால் ? நாம் நினைப்பது எல்லாம் அவருக்கு எப்படி தெரியும்ன்னு தெரியவில்லை. இந்த வாரம் மிகப்பெரிய மாபெரும் கையெழுத்து இயக்கம் நீட் தேர்வை எதிர்த்து தொடங்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெறும் அப்படின்னு நம்பிக்கை இருக்கு.
நாம் சட்டமன்றத்திலே மசோதா இயற்றி அனுப்பிவிட்டோம். நேரடியாக ஆளுநரை சந்தித்து முறையிடுறோம். குடியரசுத் தலைவருக்கு நாம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிருந்து போற தலைவர்கள் எல்லாருமே பிரதமரை பார்க்கும் பொழுது நீட்டில் இருந்து விலக்கு கொடுங்கன்னு தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதையும் தாண்டி, இந்த நீட்டு கையெழுத்து இயக்கம் என்பது பார்த்தீர்கள் என்றால் ?
நாங்கள் தொடர்ச்சியாக நீட்டை எதிர்த்து கொண்டே தான் இருக்கிறோம்… எங்களுக்குள் அந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருந்து கொண்டிருக்கிறது. அப்படின்னு காட்டுவதற்கான ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பு தான் இந்த நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம். அண்ணன் அவர்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கின்றார்.
இது திமுக முன்னெடுப்பதே ஒழிய, இது திமுகவினுடைய போராட்டம் கிடையாது. தன்னுடைய முதல் சட்டமன்ற உரையிலிருந்து தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீட்டுக்கு எதிராக அனைத்து விதமான போராட்டங்களும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. அதையும் தாண்டி நாம் பட்டினி போராட்டம் இருந்தாலும் சரி, செத்தாலும் கவலையில்லை என்கின்ற மாதிரியான நபர்கள் தான் ஒன்றிய அரசில் இருக்கிறார்கள்.
அவர்களும் எந்த முறையில் அவர்கள் காது கொடுத்து எதையுமே கேட்க தயாராக இல்லை அப்படின்றதுக்காக விட்டு விடக்கூடாது. நம்ம தொடர்ச்சியாக மக்கள் இயக்கமாக மாற்றி… திமுக நமக்கு நீட்டுவிலக்கு பெற்று தரும் அப்படின்னு ஆரம்பத்திலிருந்து உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சி தான் நீட் விலக்கு, வீட்டை ஒழிப்போம் அப்படிங்கறதற்கான கையெழுத்து இயக்கம் என தெரிவித்தார்.