வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டுவைன் ப்ரோவோ. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகமான நிலையில் 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒரு நாள் போட்டிகள், 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடினார். கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடும்போதே ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துவிட்டதோடு ஐபிஎல் ஏலத்தில் இருந்தும் வெளியேறினார். அதற்கு முன்னதாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ப்ரோவோ இந்தத் தொடருடன் ஓய்வு பெற்று விடுவதாக அறிவித்துள்ளார். மேலும் கரிபீயன் மக்களுக்காக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறேன்‌. நான் தொடங்கிய இடத்திலேயே தற்போது போட்டியை முடிக்க போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை நான் விளையாடிய அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.