சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக உள்ளது. இதற்கு சான்றாக மாணவியை சீரழித்த ஞானசேகரன் என்பவர் திமுக உறுப்பினர் என்பதும், அவர் துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுவது சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்குப்பையை கரையான் தின்று விட்டது என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் தான் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகின்றதா?. பல வழக்குகளில் தொடர்புடைய குணசேகரன் என்பவர் எப்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார்.
பல்கலைக்கழகம் பாடசாலையாக நடத்தப்படுவதற்கு பதிலாக, பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக இந்த ஆட்சி வைத்திருப்பது மிகவும் கொடுமை. ஒரு கருத்து சொன்னால் தேடி தேடி கைது செய்யும் காவல்துறை, ஏற்கனவே பல வழக்குகளின் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யாதது ஏன்?. அவர் திமுகவில் தொடர்புடையவர் என்பதால் தானா?. அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் நீதிமன்றமே சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று திமுக அரசாங்கமே சொன்னது. இப்படி இருந்தால் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு எப்படி அரசின் மீது அச்சம் வரும். இதுதான் உண்மை என்றால் உங்களிடம் சட்ட ஒழுங்கை காக்க கோரி வலியுறுத்துவதில் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து எளிதில் கடந்து விடலாம் என்று நினைத்தால் அது இப்போதே கைவிட்டு விடுங்கள். மாணவர்கள் அச்சத்தில் உள்ளன. அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இனி இந்த திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடத்துவது ஒன்றே தமிழ்நாட்டை காப்பதற்கான ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.