சமீப காலமாக நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது நூதன மோசடி, டிஜிட்டல் கைது, ஏஐ மூலம் மோசடி, குரல் வழியாக பேசும் மோசடி என புதுப்புது விதமாக மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதன் மூலம் மோசடிகள் நடைபெறுகிறது. இதற்கு முடிவு கட்ட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்ப்பதற்காக தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அழைப்பாளரின் பெயர் விளக்கக் காட்சி என்று அழைக்கப்படும். இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுவரை ட்ரூ காலர் போன்ற செய்திகள் அழைப்பாளரின் பெயரை காண்பித்து வந்தது. ஆனால் அவற்றிற்கு அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த உள்ளது.

அழைப்பாளர் பெயரை வெளிப்படுத்தும் அம்சத்திற்காக தொலைதொடர்பு நிறுவனங்கள் சில விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, விற்பனையாளர்கள் டெலிகாம் நிறுவனத்திற்கு தேவையான சர்வர்களை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் முதலில் மராட்டிய மற்றும் ஹரியானாவில் தொடங்க உள்ளது. விரைவில் மற்றும் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.