
ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த நிலையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டம், மினி டைடல் பூங்கா திறப்பு ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் தூத்துக்குடி பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் பூங்கா திறப்பு பணிகள் முடிவுற்றபின் கழக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில் தெரிவித்ததாவது, வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் தேர்தல்களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்! தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.இவ்வாறு தெரிவித்தார்.