உலகம் முழுவதும் இன்று(மார்ச்-8) சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணையும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சென்றடைவதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்திருக்கிறது.

தொழில்நுட்பம் பெண்களுக்கு பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை வழங்குகிறது. ஆசியா பசிபிக் நாடுகளில் இணைய பயனர்களில் பெண்கள் வெறும் 61 சதவீதம் மட்டுமே இருக்கின்றனர். உலக அளவில் 25 சதவீதம் பெண்கள் மட்டுமே சுகாதாரத் துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.