திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025  ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். அதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் மாநிலம் இந்தியா மற்றும் பிற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ரூ.27.22 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், மக்கள்தொகையில் வெறும் 6% மட்டுமே இருந்தாலும், தமிழகம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிக்கிறது. தனிநபர் வருமானம் (ரூ.2.78 லட்சம்) தேசிய சராசரியை விட 1.6 மடங்கு அதிகமாக உள்ளது, இது பரந்த அளவிலான செழிப்பை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில் ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு  உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் நிலத்தில் உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும். ரூ‌.675 கோடி மதிப்பீட்டில் 40 வருடங்கள் பழமையான 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைக்கப்படும்.