
திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் மாநிலம் இந்தியா மற்றும் பிற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ரூ.27.22 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், மக்கள்தொகையில் வெறும் 6% மட்டுமே இருந்தாலும், தமிழகம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிக்கிறது. தனிநபர் வருமானம் (ரூ.2.78 லட்சம்) தேசிய சராசரியை விட 1.6 மடங்கு அதிகமாக உள்ளது, இது பரந்த அளவிலான செழிப்பை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் உற்பத்தி சக்தியாக, தமிழ்நாடு ஆட்டோமொபைல்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது, இரண்டாவது மிக உயர்ந்த MSMEகளைக் கொண்டுள்ளது (35.56 லட்சம் நிறுவனங்கள்), மற்றும் அதிக விவசாய கடன்களை வழங்குகிறது. இந்தியாவின் மிகக் குறைந்த வறுமை விகிதத்தை (1.43%) அடையும் அதே வேளையில், சமூக முன்னேற்ற குறியீடு, SDG குறியீடு மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகியவற்றில் இது #1 இடத்தைப் பிடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாடு வளர்ந்து வருகிறது, இந்தியாவின் வளர்ச்சிக் கதையிலும் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
சிவகங்கை, தென்காசி, நாகை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அகழாய்வுக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகைக்காண ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும். தமிழ் மொழியின் சிறப்புக்காக மதுரை உலக தமிழ் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் புத்தகக் கண்காட்சி அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்