தமிழகத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருவதாகவும் இதற்காக13 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.

தமிழ்நாட்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும். மேலும் சென்னை கோவை மற்றும் மதுரையில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

மத்திய அரசு கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்காத நிலையில் தமிழக அரசு தங்களுடைய சொந்த நிதியிலிருந்து விடுவித்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள நிலையில் ஒருபோதும் மும் மொழிக் கொள்கையை மட்டும் ஏற்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்