தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப் 2, 2A தேர்வுக்கு 2327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 19 ஆகும்.

இந்த நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு அதிக அளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான மெயின் பாட குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.