தமிழகம் முழுவதும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக, வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மழை மற்றும் அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது என்பதுதான் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் தக்காளியின் விலை கிலோவுக்கு ₹120 வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ₹90 வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தக்காளி வெங்காயத்தின் விலை உயர்வு மக்களை அதிகமாக பாதித்து வருவதால், மக்கள் அரசு கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.