
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரும் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், உலக அளவில் எதிர்பார்ப்புகளும், கிரிக்கெட் ஆர்வலர்களின் பரபரப்பும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்தியாவின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அகமதாபாத்திற்கு வந்ததும் மைதானத்தின் தன்மையை நேரில் ஆய்வு செய்ததால் எதிர்பார்ப்பு வலுத்தது.
கேப்டன் ரோஹித் ஷர்மா மைதான ஆய்வை மேற்கொள்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இறுதிப் போட்டிக்கான அணியின் தயாரிப்புகள் மற்றும் உத்திகள் குறித்து இணையத்தில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர். அந்தவகையில்,மைதானத்தை நேற்று சோதனை செய்த இந்தியன் கேப்டன் நாளை சாதனை படைப்பாரா?என நெட்டிசன்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.