தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக ரேஷன் அரிசி லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் ஆத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றது. இதை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மடக்கி பிடித்து லாரியில் சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் லாரியின் டிரைவர் விக்னேஷை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் எடப்பாடி சேர்ந்தவர் என்றும் பெரிய குலத்தைச் சேர்ந்த தனியார் உரிமையாளர் அன்வர் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி அதை குருணையாக தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது இதை அடுத்து காவல்துறையினர் அன்வரை கைது செய்தனர் மேலும் 19 டன் ரேஷன் அரிசி யையும் லாரியையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்