செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  விவசாயிகள் ஏழு பேர் மேல் குண்டாஸ் போட்டு….   மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த பிறகு ஆறு பேர் குண்டர் சட்டத்தை இரத்து பண்ணுகிறார். இன்னும் அருள் என்று ஒருவர்  இருக்கின்றார்.  ஊடகங்கள் எல்லாம் அருளைப் பற்றி பேசுவது கிடையாது. ஏன் அவரை மட்டும் விடுதலை செய்யவில்லை ? அவரையும் விடுதலை செய்திருக்க வேண்டிதானே…..

அப்போ விவசாயிகள் தங்கள் நிலம் பறிபோகிறது…. வாழ்வாதாரம் பறி போகிறது என்ற அடிப்படையில் உணர்வோடு போராட்டம் செய்பவர்களை குண்டர் சட்டத்தில் போட்டால் இதைவிட ஒரு சர்வாதிகார… ஒரு ஹிட்லர் அரசாங்கம்… ஒரு கொடுங்கோல் அரசாங்கம்…  இடியாமின் அரசாங்கம் உலகத்தில் இருக்காது. வரலாற்றில் ஒரு கருப்பு வரலாறு என்று சொன்னால் திமுக ஆட்சி தான். போராளிகள் மீது….  விவசாயிகள் மீது குண்டாஸ் போடுவது  எந்த ஆட்சியிலும் நடக்காதது.

எந்த ஆட்சியில் நடந்தது..  உண்மையில் பெரிய அளவிற்கு விவசாயிகள் கோபமாக இருக்கிறார்கள்.  இன்னைக்கும் மழை பெய்திருக்கிறது… உரிய நிவாரணம் எதுவும் கொடுக்கவில்லை… கடுமையான மழை இருந்து. என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கை எடுத்தார்கள் ? ஒரு நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

பல மாவட்டங்களில் வெள்ளம்… பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் போய்ட்டு…  விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.   அதிகார குழுக்கள் அனுப்பி…. நிவாரண குழு அனுப்பி மீட்டெடுக்கனும்… அந்த   முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல்…..  விவசாயிகளை  பொறுத்தவரை பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.