
கேரளா மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் நாகர்கோயிலை சேர்ந்த இரண்டு மாணவிகள் வேணிகா, ஆதிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து 40 பேர் சுற்றுலா வந்த நிலையில், எக்கோ பாயிண்ட் பகுதியில் இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.