நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது பழுதாகி உள்ளது. இதனால் டிராக்டர் ஓட்டுநர் என்ஜினை மட்டும் கழட்டி விட்டு டிராக்டரின் டிப்பரை தண்டவாளத்திலேயே விட்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக டிப்பரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இது குறித்த அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரயில்களையும் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

பின்னர் சில மணி நேரம் போராடி டிப்பரை தண்டவாளத்தில் இருந்து அகற்றி உள்ளனர். இதனை அடுத்து டிப்பரை கழட்டி விட்டு சென்ற ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.