
கடந்த சில நாட்களாகவே அமெரிக்க மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார். உலகம் முழுக்க உள்ள அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் உயர்த்திய வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். தற்போது நிலவரப்படி அமெரிக்க பொருள்களுக்கு சீனா 34% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா விதித்தது.
அமெரிக்கா, உலக நாடுகளுக்கு 10 முதல் 50 சதவீதம் வரையிலான வரிகளை விதித்துள்ளது. ஆனால் சீன பொருள்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10ம் தேதி முதல் அமெரிக்க பொருள்களுக்கு சீனா 34% வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தினால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104 சதவீதமாக உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இப்போது சீனா இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 245% வரி விதித்துள்ளது.
இவ்வாறு அமெரிக்கா வரியை உயர்த்த காரணம், கார், செமி கண்டக்டர் போன்ற பொருட்கள் மற்றும் விண்வெளி தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் சில அரிய வகை தனிமங்கள் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதியை சீனா முற்றிலும் நிறுத்திவிட்டது. ஏவுகணைகள், காற்றாலைகள் போன்ற 90% பொருட்களை சீனா தடை செய்துள்ளது. இந்த பொருள்கள் எல்லாம் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.