மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு மோதிராம் மீதுள்ள அழுக்கை அகற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் விளையாட்டாக அதிக அழுத்தத்தை கொடுத்து கம்பரசரை இயக்கினர்.

அதில் அவரது தனி உறுப்புகளில் காற்று ஊடுருவி குடல் பகுதி, மற்றும் உள் பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மோதிராமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்றனர். இதைத்தொடர்ந்து மோதிராமின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட தீரஜ் லோவன்ஷி மற்றும் மகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டனர். மேலும் பாதுகாப்பு தொடர்பாக தொழிற்சாலைகளில் எச்சரிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.