
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ரயில் நெருங்கியபோது, சரியாக செல்பி எடுக்க அந்த பெண் இன்னும் அருகில் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்து வந்த ரயில் அவரை தாக்கியது.
இதனால் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்களில் ஒருவர், அவரை தன் பக்கம் இழுத்துள்ளார். இருப்பினும் அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
— Horror Mistake (@Horror_clip) September 13, 2024
“>