
கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் ஏட்டுமானூர் அருகே பட்டி தானம் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ்குமார் (42). இவர் ஏதுமானூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரை சமீபத்தில் கண்ணூர் பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் அவரது சக நண்பர்கள் மற்றும் காவல்துறையினர் வழி அனுப்பும் விழா ஒன்றினை கணேஷ் குமாருக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விழாவில் அவரது வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் குமார் வரவில்லை. இதனால் அவரது செல் போனிற்கு பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் , அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் வெளியே நின்ற ஒரு காரில் கணேஷ் குமார் சடலமாக கிடந்தார்.
இது தொடர்பாக ஏட்டு மானூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேஷ் மர்மமான முறையில் காரில் சடலமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது.