
அமெரிக்காவில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் ஜனவரி மாதம் 2வது முறையாக அதிபர் பதவியை ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2016 முதல் 2020 வரையிலான இவரது ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாட்டுகளை சந்தித்து வந்தனர். இந்நிலையில் இன்னும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றனர்.
அதாவது நேற்று அரிசோனாவில் உள்ள நகரில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நான் பதவியேற்கும் நாள் முதல் திருநங்கைகள் என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தப் போவதாக கூறினார். அதோடு குழந்தைகளின் பாலியல் சிதைவை, திருநங்கைகளை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற, தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் உத்தரவுகளில் முதலில் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆண்களை, பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக வைப்பதாகவும், ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார். இவர் 3ம் பாலினமான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கின்றார்.LGBTQ பிரச்சினைகள் சமீப காலங்களில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செய்வது குறிப்பிடத்தக்கது.