கனமழையில் சரிந்து விழுந்த மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி  மாவட்டம் கற்கால பகுதியில் கனமழை காரணமாக மரம் ஒன்று சரிந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக பிரவீன் ஆச்சார்யா என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அவர் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மரத்தின் அடியில் இருந்து  பிரவீனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலையே பிரவீன் ஆச்சார்யா பரிதாபமாக உயிரிழந்தார்.