
கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
A minor boy was allegedly tied to a tree and mercilessly beaten up with drip pipes by some people on suspicion of theft in #Karnataka‘s #Davanagere district.
A case was registered against nine people in this connection and one of the accused has been taken into custody for… https://t.co/9IyEf0FnOy pic.twitter.com/waC5NTsCuP
— Hate Detector 🔍 (@HateDetectors) April 7, 2025
வீடியோவில் சிறுவனை மரத்தில் கட்டி பல பேர் தாக்குகின்றனர். விஷயம் என்னவென்றால், சிறுவனின் தனிப்பட்ட பகுதிகளில் சிவப்புப் எறும்பு வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த தாக்குதலாளர்கள் அதே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது பொதுமக்களிடையே மேலும் கோபத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.
தவங்கிரே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, சன்னகிரி காவல்துறைக்கு முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.