அமீர் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா சாமி, கில்லி, ஆறு போன்ற பல ஹிட்டான படங்களிலும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. இவர் கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்துள்ளது, ஆனாலும் தற்போது வரை அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இதனால் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை திரிஷா அவரது சமூக வலைதளப்பாக்கத்தில்  பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திரை துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இவர், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில், திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படபிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரும் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திரிஷாவின் 22 கால நிறைவை ஒட்டி, படக்குழுவினர் நேற்று  என்று கேக் வெட்டி கொண்டாடினர்.