
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்து இந்த ஆண்டில் ஒரு பெரிய பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.
அதனை வைத்து பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கு எதிரான வரி விதிப்புகள் பாபா வங்காவின் கணிப்பை உண்மையாகி வருகின்றன. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 5 ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு அதிக வரி வர்த்தக விகிதத்தை கொண்ட நாடுகளுக்கு 10 % அடிப்படை இறக்குமதி வரி விதித்தார். இதை விடுதலை நாள் என வர்ணித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அவர் கூறினார்.
இதன் விளைவாக சீனா, ஐரோப்பியா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அதிக வரி விதிப்புகள் விதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த வரிப்போர் உலகளாவிய பங்கு சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி பல பணக்காரர்களுக்கு கணக்கில்லாத இழப்பை சந்திக்க வைத்துள்ளது. அதோடு 90 நாட்களுக்கு தற்காலிகமாக சில நாடுகளுக்கு எதிரான பதிலடி வரிகளை ட்ரம்ப் நிறுத்துவதாக அறிவித்தார்.
ஆனால் சீனாவிற்கு மட்டும் இது பொருந்தாது என்று கூறியுள்ளார். அதற்கு பதில் 125% வரி உடனடியாக விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாபா வங்காவின் 2 வது கணிப்பு பொருளாதார பேரழிவு குறித்து நடந்து கொண்டிருக்கும் நிலைமை உண்மையாக நடந்து வருகிறது கூறப்படுகிறது.